மூன்று மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை
X
By - Aaruthran, Reporter |20 Feb 2021 4:15 PM IST
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 3 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நேற்று இரவு முதல் குளிர்ந்த காற்று வீசி வந்தது. இதையடுத்து இன்று காலை மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் கனமழையாக 3 மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இதனால் மின்சாரம் தடைபட்டது. கனமழையால் கிழக்கு கடற்கரைச் சாலை, பேருந்து நிலையம், சுப்ரமணியர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் அதிக வெப்பத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று திடீரென பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியுடன் காணப்பட்டது.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu