வங்கியில் மோசடி- விவசாயிகள் சாலை மறியல்

வங்கியில் மோசடி- விவசாயிகள் சாலை மறியல்
X

பட்டுக்கோட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாத்திக்கோட்டை பூவாளூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவில்லை எனவும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வங்கி ஊழியர்கள் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டுக்கோட்டை - கறம்பக்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பட்டுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!