திருமணத்திற்காக தந்தையை சிலையாக வடித்த சகோதரிகள்

திருமணத்திற்காக தந்தையை சிலையாக வடித்த சகோதரிகள்
X
பட்டுக்கோட்டையில் நெகிழ்ச்சியான சம்பவம்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவர் திருமணமாகி மூன்று மகள்கள். முதல் இரண்டும் மகளுக்களுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், எதிர்பாராதவிதமாக செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். அவர் உயிரிழந்து எட்டு ஆண்டுகள் ஆகியும், அவரது செல்ல மகள் திருமணத்தில் செல்வம் இல்லாதது, அவரது குடும்பத்திற்கு வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடைசி மகளுக்கு மறையாத சோகமாகவும் இருந்துள்ளது. மணமகளின் வருத்ததை போக்குவதற்காக 6 இலட்சம் செலவில், மூத்த சகோதரி புவனேஷ்வரி சிலிக்கானை கொண்டு தந்தையின் முழு உருவ சிலையை வடிவமைத்து சகோதிரிக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இதைக்கண்ட மணமகள் லட்சுமி பிரபா மற்றும் அவரது உறவினர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உயிருடன் இல்லாத தன் தந்தையின் சிலைக்கு முன்பு மணமக்கள் மாலை மாற்றிக், தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து லட்சுமி பிரபாவின் சகோதரி புவனேஸ்வரி கூறுகையில், எங்கள் திருமணத்தை எங்கள் தந்தை சிறப்பாக நடத்தியதாகவும், சகோதரியின் திருமணத்தின் போது தந்தை இல்லை என்ற வருத்தம் எங்களுக்கு சகோதிரிக்கும் இருந்ததனால், தந்தையை மீண்டும் கொண்டு வர முடிவு செய்து, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் சுமார் 6 லட்சம் செலவில் தந்தையின் சிலையை உருவாக்கினோம், தத்துரூபமாக வர வேண்டும் என்பதற்காக இரவு பகல் அங்கேயே தங்கி உருவாக்கியுள்ளோம் என தெரிவித்தார்.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!