பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற கிராம மக்கள் கோரிக்கை

பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற கிராம மக்கள் கோரிக்கை
X

பழுதடைந்த மின் கம்பம்

ராயக்கோட்டை ஊராட்சியில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சி, கிருஷ்ணாபுரம் குடியானத்தெரு பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பம் ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் முற்றிலும் பழுதடைந்து கீழே சாய்ந்து விடும் நிலையில் உள்ளது.

பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டி கிராமமக்கள் மாரியம்மன் கோயில் மின்வாரியத்திடம் பலமாதங்களாக வலியுறுத்தியும் இன்னும் மின்கம்பம் அகற்றப்படாமலே உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!