பாபநாசத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பாபநாசத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

பாபநாசத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது.

பாபநாசத்தில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய, நகர பா.ஜ.க. சார்பில் கடைவீதியில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் தலைமை வகித்து வாஜ்பாயின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் கலிய கோவிந்தராஜன், நகர தலைவர் மணிகண்டன், அரசு சார்பு தொடர்பு மாவட்ட செயலாளர் ஐயா செல்வம், தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபு, பாபநாசம் ஒன்றிய பொதுச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்