பாபநாசம் ரயில்வே கேட்டில் லாரி மோதல்: பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

பாபநாசம் ரயில்வே கேட்டில் லாரி மோதல்: பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
X

லாரி மோதி சேதமடைந்த பாபநாசம் ரயில்வே கேட்.

பாபநாசம் ரயில்வே கேட்டில் லாரி மோதியதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது; டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் - புவனேஸ்வர் சிறப்பு விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது, ரயில்வேகேட் பணியாளர்கள் லெவல் கிராசிங் கேட்டை மூட முயன்றனர்.

அப்போது வல்லத்திலருந்து பட்டீஸ்வரம் நோக்கி செம்மண் ஏற்றி கொண்டு சென்ற லாரி ஒன்று அதிவேகமாக முதல் கேட்டை தாண்டி இரண்டாவது கேட்டின் மோதியதால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் கேட் வளைந்து ரூ.20ஆயிரம் சேதம் ஏற்பட்டது.

இதனால் பெரும் விபத்திலிருந்து ரயில் தப்பியது. இதுகுறித்து தஞ்சாவூர் இருப்புப் பாதை இளநிலை பொறியாளர் கும்பகோணம் ரயில்வே பாதுகாப்பு படைக்கு புகார் தெரிவித்தார்.

கும்பகோணம் ரயில்வே பாதுகாப்பு படை உதவி துணை ஆய்வாளர் செல்வநாதன், தலைமை காவலர் குமார் மற்றும் போலீசார்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு, ரயில்வே கேட் மீது மோதி சேதம் ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநர் தஞ்சாவூரை சேர்ந்த பெரமையன் (43) என்பவரை கைது செய்தனர்.

இந்த விபத்தினால் பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கும்பகோணத்திலிருந்து 25-க்கும் மேற்பட்ட ரயில் இருப்புபாதை பணியாளர்கள் விரைந்து வந்து சேதமடைந்த ரயில்வே கேட்டை சீரமைத்தனர்.

Tags

Next Story