பேருந்தில் பயணிகள் நெரிசலை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து துறை

பேருந்தில் பயணிகள் நெரிசலை  சீரமைக்கும் பணியில் போக்குவரத்து துறை
X

பாபநாசத்தில் படிக்கட்டு பயணத்தை தடுக்க போக்குவரத்து மேலாளர் நேரில் சென்று சீரமைத்தார் 

பாபநாசத்தில் பேருந்தின் படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பதை தவிர்ப்பதற்காக போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததை முன்னிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது.

பாபநாசம் பகுதியில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியூரில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் பலர் பஸ்களில் தான் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக அரசு பஸ்களைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் பாபநாசத்தில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் சில பஸ்களில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது. சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் ஒருவருக்கொருவர் நெருக்கியபடி பயணிக்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான பஸ்களில் இருக்கைகள் நிரம்பி மாணவ- மாணவிகள் நின்று கொண்டே பயணம் செய்கின்றனர்.

தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இருக்கையில் இடம் கிடைக்காமல் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஒருவேளை எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட நேர்ந்தால் மாணவர்கள் மட்டுமன்றி பயணிகளுக்கும் அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இதனையொட்டி கும்பகோணம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாண் இயக்குனர் பாபநாசம் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தினர். அதன்படி பாபநாசம் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளில் காலை மற்றும் மாலை பரபரப்பான மணி நேரத்தில் மாணவர்கள், பெண்கள், வயதானவர்கள் பேருந்தின் படிக்கட்டில் பயணிப்பதை தவிர்ப்பதற்காக போக்குவரத்தை சீரமைக்கும் பணியினை பணி மேலாளர் பாலமுருகன் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் அலுவலர்கள் பாபநாசம் பேருந்து நிலையத்தில் பணியினை மேற்கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!