திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பாபநாசம் தாலுக்கா திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 6-ஆம் தேதி புதன்கிழமை அன்று நடைபெறுவதையொட்டி பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மதுசூதனன் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை திருவிழா சமயத்தில் விழா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தக்க முன்னேற்பாடுகளுடன் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. நடமாடும் மருத்துவ குழு, தயார் நிலையில் தீயணைப்புத்துறை, சுழற்சி முறையில் காவல்துறை காவல் பணி, மின்சாரத் துறையினர் மின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்தல், ஊராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்குகள் பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல், சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வது, சாலைப் பணிகள் உள்பட அனைத்து வசதிகளையும் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் செயல் அலுவலர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் விஜயன், ஊராட்சி மன்ற தலைவர் பவுனம்மாள் மற்றும் தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu