பாபநாசத்தில் உலக திருக்குறள் மைய கூட்டம்

பாபநாசத்தில்  உலக திருக்குறள் மைய கூட்டம்
X

பாபநாசம் உலக திருக்குறள் மைய கூட்டம் துணைத்தலைவர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது. 

பாபநாசத்தில் ஜனவரி மாதம் 15ம் தேதி நடைபெற உள்ள திருவள்ளுவர் தின விழாவை சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது

பாபநாசம் உலக திருக்குறள் மைய கூட்டம் துணைத்தலைவர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். இக்கூட்டத்தில் தேசிய நல்லாசிரியர்கள் கலைச்செல்வன், சத்தியமூர்த்தி, இணை செயலாளர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் செங்கதிர்ச்செல்வன், செங்கமலம், கீர்த்தனா, ராஜேந்திரன், செல்வராஜ், மோகன், சிவகாவிரிச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இக்கூட்டத்தில் வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதி நடைபெற உள்ள திருவள்ளுவர் தின விழாவில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன், மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட அரிமா சங்க தலைவர் ஆறுமுகம் ஆகியோரை அழைத்து விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture