பாபநாசம் அருகே கான்கிரீட் தொகுப்பு வீடு மேற்கூரை விழுந்து 2 குழந்தைகள் காயம்

பாபநாசம் அருகே கான்கிரீட் தொகுப்பு வீடு மேற்கூரை  விழுந்து  2 குழந்தைகள் காயம்
X

மேற்கூரை இடிந்து விழுந்த பாபநாசம் தாலுக்கா வேம்பங்குடி சந்திரபாடி கிராமத்தில் வசித்துவரும் குணசேகரன் என்பவருடைய கான்கிரீட் தொகுப்பு வீடு

பாபநாசம் அருகே கான்கிரீட் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - 2 குழந்தைகள் படுகாயம்

பாபநாசம் தாலுக்கா வேம்பங்குடி சந்திரபாடி கிராமத்தில் வசித்துவரும் குணசேகரன் என்பவருடைய கான்கிரீட் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விட்டது. அதன் அருகே விளையாடிக்கொண்டிருந்த சதீஷ் மற்றும் சிவானந்தம் ஆகியோர்களின் குழந்தைகள் ஹரிஹரன் (5), சஞ்சனா (3) ஆகியோர் மீது மேற்கூரை விழுந்ததில் குழந்தைகளுக்கு கை மற்றும் இடுப்பில் லேசான காயம் ஏற்பட்டது. உடனே படுகாயமடைந்த இரண்டு குழந்தைகளையும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!