பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சை டி.ஐ.ஜி. ஆய்வு
பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது மரக்கன்று நடவு செய்தார்
பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதுசமயம் தஞ்சாவூர் ஊரக கோட்டத்தின் காவல் சரக சம்பந்தப்பட்ட பதிவேடுகள், வழக்கு கோப்புகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் தென்னை மரக்கன்றுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வளாகத்தில் நட்டு வைத்தார். ஆய்வின்போது பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர்கள் வனிதா, அனிதா கிரேசி, பகவதி சரணம், கரிகால் சோழன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu