உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி? தமிமுன் அன்சாரி விளக்கம்

உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி? தமிமுன் அன்சாரி விளக்கம்
X

அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதற்கு, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பதில் அளித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல செயற்குழுக்கூட்டம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரியில் நடைபெற்றது. இதில், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது

தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து , சிஏஏ சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசில் புகார் அளித்ததால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் வசீம்அக்ரம் குடும்பத்திற்கு, தமிழக முதலமைச்சர் ரூ.20 லட்சம் கருணை அடிப்படையில் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.

செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி, சிறையில் 10 ஆண்டுகளாக உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் திமுக வுடன் கூட்டணி அமைத்து, அவர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

Tags

Next Story