பாபநாசத்தில் ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் தெருமுனை பரப்புரை கூட்டம்

பாபநாசத்தில் ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் தெருமுனை பரப்புரை கூட்டம்
X

பாபநாசத்தில் திராவிட கழகத்தின்  தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.

பாபநாசத்தில் ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

பாபநாசத்தில் ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு விளக்க தெருமுனை பரப்புரை கூட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. பாபநாசம் நகர தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் மோகன், மண்டல செயலாளர் குருசாமி, மாவட்ட செயலாளர் துரைராசு, மாவட்ட அமைப்பாளர்கள் அழகுவேல், திருஞானசம்பந்தம், ஒன்றிய தலைவர் தங்கபூ ஆனந்தம், ஒன்றிய செயலாளர் கலிய மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாபநாசம் நகர செயலாளர் வீரமணி வரவேற்று பேசினார். திராவிடர் கழகம் தலைமை கழக பேச்சாளர் இராம.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் சாமு.தர்மராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன், பாபநாசம் பேரூராட்சி துணைத்தலைவர் பூபதி ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் உறவழகன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் லெனின் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் பாபநாசம் நகர துணை செயலாளர் மதிவாணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!