பாபநாசத்தில் குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழக மாநில பொதுக்குழு கூட்டம்
பாபநாசத்தில் குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பாபநாசத்தில் குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வழக்கறிஞர் உத்தமகுமரன் தலைமை வகித்து பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில இணைச்செயலாளர் பாபநாசம் நீலமேகம், பொதுச்செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு செயலாளர் முத்துப்பேட்டை வீரமணி வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் மாநில இளைஞர் அணி செயலாளர் டால்மியாபுரம் மார்கண்டன், துணை இளைஞர் அணி செயலாளர் நடுவக்கரை ராஜா, மாநில அமைப்பு செயலாளர் பல்லடம் கிருஷ்ணன், மாநில செயலாளர் நெய்வேலி வெங்கடேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் அரியலூர் தங்கராசு, மாநில அவை செயலாளர் பந்தநல்லூர் ராமசாமி, மாநில அவை தலைவர் திருவாரூர் சிகாமணி, துணை அமைப்பு செயலாளர் ஆலம்பாடி ராஜூ, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்டம் வாரணவாசி கருணாகரன் மாநில பொருளாளராகவும் , திருச்சி சமயபுரம் அன்பழகன் மாநில தகவல் தொழில் நுட்ப செயலாளராகவும், அய்யம்பேட்டை லெட்சுமணன் மாநில துணை ஒருங்கிணைப்பாளராகவும், மாத்தூர் வெங்கடேசன் மாநில துணை செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சேலம் மாவட்ட செயலாளராக முருகன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக ஆனந்தன், விழுப்புரம் மாவட்ட செயலாளராக விநாயகமூர்த்தி, தேனி மாவட்ட செயலராக ஜெகதீஸ் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்களுக்கு மாநிலத் தலைவர் உத்தமகுமரன் சால்வை அணிவித்து பாராட்டினார். தமிழகத்தின் 38 மாவட்டங்களிலிருந்தும் 100-க்கும் மேற்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் மலைக்குறவர்களுக்கு தடையின்றி சாதி சான்று வழங்கிட வேண்டும், வீடில்லாமலும், வீட்டு மனை இல்லாமலும் வாழ்ந்து வரும் மலைக்குறவர்களுக்கு இலவச வீட்டு மனை, தொகுப்பு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும், மலைக்குறவர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் கட்சிக்கு வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில பொருளாளர் கருணாகரன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu