பாபநாசத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

பாபநாசத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்
X

கால்நடை சிறப்பு விழிப்புணர்வு முகாமை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.  தொடங்கி வைத்தார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். இதில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி கண்ணதாசன், தி.மு.க. பாபநாசம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் தாமரைச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ரஹ்மத் அலி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அம்மாபேட்டை மைதீன், கால்நடை உதவி மருத்துவர்கள் ஆதனூர் சரவணன், சுவாமிமலை சிவக்குமார், கபிஸ்தலம் வடிவேலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

முகாமில் கால் நடைகளுக்கு பொது சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினை ஊசி, சினை பரிசோதனை செய்யப்பட்டு, தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. முகாமில் சிறந்த கிடாரி கன்றை வளர்ப்பவர்களுக்கு 3 பரிசுகளும், சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு 3 கேடயங்களும் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!