கபிஸ்தலத்தில் மணல் கடத்திய வாலிபர் கைது
X
By - A.Madhankumar, Reporter |30 March 2022 7:15 PM IST
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மேற்பார்வையில், கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்கமல், முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நாயக்கர்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோவை போலீசார் வழிமறித்தனர். இதில், சரக்கு ஆட்டோவில் இருந்து 4 பேரில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட இளங்கார்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரவி மகன் பிரபன்பாபு (29) என்பவரை போலீசார் கைது செய்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu