திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சரத்குமார்,ராதிகா சாமி தரிசனம்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சரத்குமார்,ராதிகா சாமி தரிசனம்
X
கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சரத்குமார், ராதிகா குடும்பத்துடன் சாமி தரிசனம். பேரக் குழந்தைகளுக்கு அரிசி, வெல்லம் துலாபாரம் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் திருகோவிலில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் அவரது மனைவி நடிகை ராதிகா குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

முல்லைவன நாதரை தரிசனம் செய்துவிட்டு பின்னர் கர்ப்பரட்சாம்பிகையை அம்பாளை தரிசனம் செய்தனர். அப்போது எடைக்கு எடை அரிசி வெல்லம் வைத்து பேரக்குழந்தைகளுக்கு துலாபாரம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் சார்பில் அவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது ராதிகா கூறியதாவது, கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு 29 ஆண்டுகளாக நாங்கள் வருகிறோம். அதன்படி இன்றும் என் மகள் மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் அம்பாளை தரிசனம் செய்ய வந்துள்ளோம். கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக வர முடியாமல் இருந்தது தற்போது வாய்ப்பு வந்துள்ளது வந்துள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

சரத்குமார் கூறும்போது, தமிழகம் முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் 119 வது பிறந்த நாள்விழா சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. காமராஜரின் நினைவு மணிமண்டபங்களில் சமக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஒளி விளக்குகள் ஏற்றப்பட்டது.

திருக்கருகாவூரில் உள்ள இக்கோவிலுக்கு மனைவி,மகள், மருமகன், பேரக் குழந்தைகளுடன் தரிசனம் செய்ய வந்துள்ளேன். வேண்டுதல் இருந்தது அந்த வேண்டுதலை நிறைவேற்றி உள்ளோம். கோவிலில் வைத்து அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடாது. இன்னும் 15 நாட்களுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பதில் அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!