சாலை விபத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை முன்னாள் வீரர் பலி

சாலை விபத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை முன்னாள் வீரர் பலி
X
அய்யம்பேட்டை அருகே நடந்த விபத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை முன்னாள் வீரர் பலி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே, அய்யம்பேட்டை ராஜீவ்காந்தி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (66). மத்திய தொழில் பாதுகாப்பு படை முன்னாள் வீரர். இவர் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அய்யம்பேட்டை பை-பாஸ் ரோட்டில் அவர் சென்றபோது, எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயராமனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!