விசித்திராஜபுரம் கலைஞர் நகரில் சுடுகாட்டை ஆக்கிரமித்துள்ள இடம் மீட்பு

விசித்திராஜபுரம் கலைஞர் நகரில் சுடுகாட்டை ஆக்கிரமித்துள்ள இடம் மீட்பு
X

விசித்திராஜபுரம் கலைஞர் நகரில் சுடுகாட்டை ஆக்கிரமித்துள்ள இடம் மீட்கப்பட்டது. 

விசித்திராஜபுரம் கலைஞர் நகரில் சுடுகாட்டை ஆக்கிரமித்துள்ள இடம் மீட்கப்பட்டது.

பாபநாசம் வட்டம், உள்ளிக்கடை கிராமம், விசித்திராஜபுரம் கலைஞர் நகரினைச் சேர்ந்த, ராஜமாணிக்கம் வயது (55) என்பவர் அதிகாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தார். அந்த நகரை சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் இடுகாட்டில், ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், ஆக்கிரமிப்பினை அகற்றி சுடுகாட்டு தகுதியான இடத்தை காண்பித்தால் மட்டுமே அவரது உடலை அடக்கம் செய்வோம், இல்லையெனில் சாலை மறியல் செய்வோம் என தெரிவித்தனர்.இதனை அடுத்து, சரக நில அளவர் மற்றும் வட்ட சார் ஆய்வாளர் ஆகியோரை கொண்டு மயானம் அளந்து காண்பிக்கப்பட்டது. அங்கு ஆக்கிரமிப்பு உள்ள இடங்களின் உரிமையாளர் தெட்சிணாமூர்த்தி, கரும்பு அறுவடை செய்த பின்னர் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக எழுதி கொடுத்தார்.இதனையடுத்து இறந்தவரது உடல் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!