வீரமாங்குடி ஊராட்சியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா

வீரமாங்குடி ஊராட்சியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா
X

ரஜினி பிறந்தநாளை ஒட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கிய ரசிகர்கள். 

தஞ்சை மாவட்டம், வீரமாங்குடி ஊராட்சியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பாபநாசம் ஒன்றியம் வீரமாங்குடி ஊராட்சியில் ரஜினிகாந்த் 71-வது பிறந்தநாள் விழா ஊராட்சி மன்ற பொறுப்பாளர் நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது. கிளை பொறுப்பாளர்கள் பிரபாகரன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் தியாகராஜன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில், பாபநாசம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் ஒன்றிய செயலாளர் குமார் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், சிலேட் போன்ற உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக. கற்பக விநாயகர் கோவிலில் ரஜினிகாந்த் நீடூடி வாழ சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய பொருளாளர் கார்த்தி, பாபநாசம் நகர பொறுப்பாளர்கள் பீர்முகமது, ரஜினிநேசன், வீரமாங்குடி பொறுப்பாளர்கள் ஆனந்த், குரு, வீரகண்ணன், மணி பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!