சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க  பொதுமக்கள் கோரிக்கை
X

காவி நிறத்தில் குடிநீரக்குழாயில் வரும் குடிநீர்

சுகாதாரமற்ற குடிநீர் - சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய பொதுமக்கள் கோரிக்கை

பாபநாசத்தை அடுத்த அகரமாங்குடி மேலத்தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் குழாயில் துணியை வைத்து தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

அப்படி இருந்தும் தண்ணீர் மஞ்சள்நிறத்தில் அசுத்தமாக வருகிறது. இந்த அசுத்தமான தண்ணீரை குடிப்பதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் தொற்று நோய்களில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!