பாபநாசம் பேரூராட்சியில் வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு

பாபநாசம் பேரூராட்சியில் வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர்  ஆய்வு
X

 பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் 

பாபநாசம் பேரூராட்சியில் வாக்குச்சாவடி மையத்தினை தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. பாபநாசம் பேரூராட்சியில் 15-வார்டுகளுக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தினை பாபநாசம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன், மண்டல அலுவலர் பூங்குழலி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பாபநாசம் பேரூராட்சி பகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் மேற்பார்வையில், வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் பதாகைகள் அகற்றப்பட்டன. சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் அளிக்கப்பட்ட்ட பாபநாசம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, திருப்பாலத்துறை, 108 சிவாலயம், வங்காரம்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்த அரசியல் கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்டன. பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் படமும் மறைக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story