பாபநாசத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

பாபநாசத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்
X

பாபநாசம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. 

பாபநாசம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழ்நாட்டை பிளாஸ்டிக் மாசு இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்கு, அரசு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. நமது சுற்றுச்சூழலை காப்பது நம் கடமை என்ற உணர்வோடு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்துமாறு தமிழக அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், பாபநாசம் பேரூராட்சியில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பாபநாசம் பகுதியில் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு துண்டு பிரசுரங்கள் மூலம் விநியோகம் செய்து, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!