பாபநாசத்தில் புறா பந்தய போட்டி

பாபநாசத்தில் புறா பந்தய போட்டி
X

பைல் படம்

பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடையில் புறா வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் பாரம்பரிய புறா பந்தய போட்டி நடைபெற்றது.

பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை, திருவிடைமருதூர், திருவையாறு, தஞ்சாவூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட புறாக்கள் பண்டாரவாடை யிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு கொண்டு சென்று அங்கிருந்து புறா பந்தயம் தொடங்கி புறாக்களை திறந்து விட்டார்கள்.

அங்கிருந்து புறாக்கள் 252 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் பறந்து வந்து வளர்க்கப்படும் இடங்களுக்கு வந்தடைந்தது. எந்த புறா முதலில் வருகிறதோ அந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புறா வளர்ப்பவர்கள் வீட்டிலேயே இருப்பார்கள். தங்கள் புறா வந்தடைந்ததும் வளையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் அடையாள நம்பரை பார்த்து அதை அந்த அப்ளிகேஷனில் பதிவு செய்து விடுவார்கள்.

இதில் எந்த புறா முதலில் சென்றது என்பதை அறிந்து போட்டி நடைபெறும். போட்டி நடுவர் வெற்றி புறாவை அறிவிப்பார். வெற்றி பெற்ற புறாவுக்கு விழா நடத்தி கோப்பை சான்றிதழ் கொடுக்கப்படும். மேலும் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போலவே புறா பந்தயம் பாரம்பரிய விளையாட்டு தான் என்றும், இதை ஊக்குவிக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் சங்கத்தை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!