உயர்கோபுர மின்விளக்குகள் எரியாததால் சிரமப்படும் மக்கள்
தஞ்சை மாவட்டம், வடக்குமாங்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் அங்காடி அருகே எரியாத உயர்மின் கோபுர விளக்குகள்
தஞ்சை மாவட்டம், வடக்குமாங்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் அங்காடி அருகே கிராமமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த ஆண்டு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால் சில மாதத்திலேயே மின்விளக்குகள் பழுதடைந்து விட்டதால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனால் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பழுதடைந்த மின்விளக்குகளை எரிய வைக்க கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் உயர்கோபுர மின்விளக்குகள் எரிய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராமமக்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் கூறும்போது, உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு 10 மாதம்தான் ஆகிறது. உயர்கோபுர விளக்குகள் பொருத்தப்பட்ட நான்கு மாதத்திலேயே பல்புகள் எரியவில்லை.
நாங்களும் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் சம்மந்தபட்ட நிறுவனத்திடம் பல்புகள் எரியாதது குறித்து தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளோம். ஆனால் இன்னும் சரிசெய்யாமல் உள்ளனர் என்றார்.வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கிராமமக்களின் சிரமத்தை உணர்ந்து எரியாத உயர்கோபுர மின்விளக்குகளை விரைவில் எரிய வைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது கிராமமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu