பாபநாசம் அருகே திருமண கறிவிருந்து நிகழ்ச்சி, மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா

பாபநாசம் அருகே திருமண கறிவிருந்து நிகழ்ச்சி,  மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா
X
பாபநாசம் அருகே திருப்பாலத்துறையில் திருமண கறி விருந்தில் கலந்து கொண்ட மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா உறுதிச் செய்யப்படது.

பாபநாசத்தை அடுத்த திருப்பாலத்துறையை சேர்ந்தவர் ராஜா. இவரது திருமணம் கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி கறி விருந்து நடைபெற்றது.

இந்நிலையில் கறிவிருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் நலிவுற்றது. இதனையடுத்து கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் மாப்பிள்ளை ராஜா உள்பட 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது, தொற்று பாதித்தவர்களை கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் கைக்குழந்தையுடன் தாய்க்கும் கொரனோ தொற்று ஏற்பட்டதையடுத்து இவர்கள் இருவரையும் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!