பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள்  கண்டன ஆர்ப்பாட்டம்
X

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார இணை செயலாளர் சுகுமார் தலைமை தாங்கினார். தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட இணை செயலாளர் தமிழ்வாணன், துணை தலைவர் விநாயகம், ஓய்வுபெற்ற வருவாய் துறை சங்க வட்ட தலைவர் கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!