பாபநாசம் ரயில் நிலையத்துக்கு 50 மரக்கன்றுகள்: இந்திய செஞ்சிலுவை சங்கம்

பாபநாசம் ரயில் நிலையத்துக்கு 50 மரக்கன்றுகள்: இந்திய செஞ்சிலுவை சங்கம்
X

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை சார்பில் ரயில் நிலையத்திற்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் பாபநாசம் ரயில் நிலையத்திற்கு 50 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா காலகட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை சார்பில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு என பாபநாசம் ரயில் நிலையத்துக்கு புங்கன், வேம்பு, மகிழம், பாதாம் உள்ளிட்ட 50 மரக்கன்றுகளை நிலைய அலுவலர் ராம்குமாரிடம், செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை புரவலரும், ஆயுட்கால உறுப்பினரும் திமுக பிரமுகருமான நவநீதகிருஷ்ணன் வழங்கினார்.

பயணிகள் அமர்வதற்காக 6 பிளாஸ்டிக் நாற்காலி களையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர் அன்பழகன், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், சமூக ஆர்வலர்கள் ஜெயதேவன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!