பாபாநாசம்: வாக்கு சேகரிப்பின் போது திமுக வேட்பாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பாபாநாசம்: வாக்கு சேகரிப்பின் போது திமுக வேட்பாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
X

வாக்கு சேகரிப்பின் போது உயிரிழந்த திமுக வேட்பாளர் அனுசியா.

அய்யம்பேட்டை பேரூராட்சியில் திமுக வேட்பாளர் அனுசியா வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் அனுசியா. இவர் அய்யம்பேட்டை பேரூர் திமுக துணை செயலாளராக இருந்து வந்தவர். இவர் அய்யம்பேட்டை காந்திநகரில் குடியிருந்து வந்தார்.

இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகளுடன் 9வது வார்டில் உள்ள பெரியதைக்கால் தெருவில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக வேட்பாளர் அனுசியா திடீரென்று மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து இறந்து விட்டார். உடனே அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் வேட்பாளர் அனுசுயாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதனால் குடும்பத்தினரும், திமுக நிர்வாகிகளும் சோகத்தில் மூழ்கினார்கள். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அய்யம்பேட்டை பேரூராட்சி 9 - வது வார்டில் வேட்பாளர் இறந்து விட்டதால் அந்த வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தப்படும் என தெரிய வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!