பாபநாசம் ஒன்றியத்தில் புதிதாக குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

பாபநாசம் ஒன்றியத்தில்  புதிதாக குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
X

பாபநாசத்தில் குடிசை வீடு கணக்கெடுப்பு பற்றிய  ஆய்வு கூட்டம் நடந்தது.

பாபநாசம் ஒன்றியத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விடுபட்ட குடிசை வீடுகளை புதிதாக கணக்கெடுப்பு செய்ய பயிற்சி முகாம் நடைபெற்றது. பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்தார்.

இம்முகாமில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு புதிய குடிசை வீடுகள் கணக்கீடு செய்து வீடுகளின் பயனாளிகளின் விவரங்களை குழு மூலம் உடன் தயாரித்து உடனே அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள்.

இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், ஊராட்சி செயலாளர்களும், ஊக்குவிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!