கபிஸ்தலம் அருகே நடந்த கொலை: அரசு பஸ் டிரைவர் தஞ்சை கோர்ட்டில் சரண்
ரமேஷ்
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள பட்டுக்குடி மெயின்ரோட்டில் வசிப்பவர் பிச்சைபிள்ளை (65). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், இரண்டு மகள்கள், உள்ளனர். இவர் பட்டுகுடி கிராமத்திலேயே சொந்தமாக செங்கல்சூளை நடத்தி வருகிறார்.
அதே பகுதி, மெயின் ரோட்டில் வசிக்கும் சகாதேவன் மகன் ரமேஷ் (42); இவர், தஞ்சாவூரிலுள்ள தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடம் சம்பந்தமான முன்விரோதம் நீண்ட நாளாக இருந்து வந்தது.
கடந்த 20ந் தேதி மாலை பிச்சைபிள்ளையின் செங்கல் சூளைக்கு சென்ற டிரைவர் ரமேஷ் பிச்சை பிள்ளையிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிச்சைபிள்ளையை சரமாரியாக வெட்டி விட்டார். படுகாயமடைந்த பிச்சை பிள்ளை உயிருக்கு ஆபத்தான நிலையில் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் டிஎஸ்பி பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ராஜ்கமல், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு டிரைவர் ரமேஷ் என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், டிரைவர் ரமேஷ் தஞ்சை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu