மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிக்கு பீரோ வழங்கல்

மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிக்கு பீரோ வழங்கல்
X

அய்யம்பேட்டை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிக்கு பீரோ வழங்கல்.

மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிக்கு பாபநாசம் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் பீரோ வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை புரவலரும், உறுப்பினரும், திமுக பிரமுகருமான பண்டாரவாடை நவநீதகிருஷ்ணன், கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அய்யம்பேட்டை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி மற்றும் தொழில் பயிற்சி மையத்திற்கு குழந்தைகள் நலன் கருதி புதிய பீரோவை நிர்வாக இயக்குனர் ராஜேந்திரனிடம் வழங்கினார். தொடர்ந்து, கோவில் தேவராயன் பேட்டை கிராமத்தில் தொடர் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகளையும், கும்பகோணம் வள்ளலார் ஜோதி முதியோர் மையத்திலுள்ள முதியோர்களுக்கு 3 வேளை உணவு வழங்கினார்.


Tags

Next Story