இன்சுலினை சுரக்கச்செய்யும் மருத்துவ குணம் கொண்ட அரிசி...!
பைல்படம்
சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படும் ஆத்தூர் கிச்சடி சம்பா அரிசி இரகம் தற்போது அதிக அளவில் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.
இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். தேவையான அளவு மாவுச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளது. மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யும். இந்த வகை அரிசியை கஞ்சி வைத்து அருந்துவதன் மூலம் இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதுடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மருத்துவ குணம் உண்டு. பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
அந்த வகையில் ஆத்தூர் கிச்சடி சம்பா நெல் பாபநாசம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வெள்ளை அரிசியும் சன்னரகமாகவும் நாம் சாப்பிட விரும்புகிறோம். அதற்கேற்றார் போல் வெள்ளை அரிசியும், சன்னரகமாகவும் சாப்பிட சுவையாகவும் மக்கள் விரும்பி சாப்பிடும் இரகம் தான் ஆத்தூர் கிச்சடி சம்பா. 4 1/2 அடி வரை வளரும் தன்மையுடையது. 5 மாத விளைச்சலான இந்த அரிசியானது ஆடி பட்டத்தில் இருந்து தை பட்டம் வரை ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே விளைகிறது.
பாபநாசம் பகுதியில் மருத்துவம் குணம் கொண்ட இயற்கை நெல் சாகுபடி ஆத்தூர் கிச்சடி சம்பா நெல் சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. இப்போது பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டு மருத்துவ குணம் கொண்ட நெல் இரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்ய முயற்சித்து வருகின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த பட்டதாரியான முருகராஜ் என்பவர் 2 1/2 ஏக்கர் நஞ்சை பரப்பளவில் இப்பயிரை சாகுபடி செய்கிறார். 11 வருடமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இதற்கு பஞ்சகாவியம், மீன் அமினோ அமிலம், தயிர் கரைசல், பூச்சிவிரட்டி ஆகியவற்றை நாங்களே தயாரித்து பயன்படுத்தி வருகின்றோம். இதனை ஒற்றை நடுவுமுறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இந்த இரகம் அறுவடை கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு ஏதுவான நிலையை அடையும். இந்த நெல்லை கிலோ 70ரூ என்ற அளவில் தஞ்சை பகுதி வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu