பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை கூட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது.
பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை கூட்டம், ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், பக்கிரிசாமி, ஜெயபால், தமிழ்ச்செல்வி, சென்னை பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஷேக் அலாவுதீன், முருகேசன், சங்கர், தங்கராசு, ஜார்ஜ், செல்வம், மேரி, சிவானந்தம், சின்னையன், செல்வகுமார், மகேந்திரன் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற 18, 19ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட 21வது மாநாட்டில் பாபநாசம் ஒன்றியத்தில் இருந்து அனைத்து நிலை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் குடும்பத்தோடு திரளாக கலந்து கொள்வது எனவும், மாநாட்டில் ஏற்றப்படும் கொடியை சிறப்பாக நிகழ்ச்சி நடத்தி ஊர்வலமாக கொண்டு செல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu