பாபநாசத்தில் லயன்ஸ் மண்டல மாநாடு - மாவட்ட ஆளுநர் பங்கேற்பு

பாபநாசத்தில் லயன்ஸ் மண்டல மாநாடு - மாவட்ட ஆளுநர் பங்கேற்பு
X

பாபநாசத்தில் லயன்ஸ் மண்டல மாநாடு நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த லயன்ஸ் மண்டல மாநாட்டில் மாவட்ட ஆளுநர் பங்கேற்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் லயன்ஸ் மண்டல மாநாடு மண்டல தலைவர் பேராசிரியர் செல்வராஜன் தலைமையில் நடைபெற்றது. செயலாண்மை குழு தலைவர் சம்பந்தம் வரவேற்றார். இம்மாநாட்டை மாவட்ட ஆளுநர் சௌமா.ராஜரெத்தினம் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் சேதுக்குமார், முதல் துணை ஆளுநர் சேதுசுப்பிரமணியன், இரண்டாம் துணை ஆளுநர் இமயவரம்பன், முன்னாள் ஆளுநர்கள் சண்முகவேல், வேதநாயகம், வீரபாண்டியன், சேக் தாவூத், மாவட்ட அவை செயலர் கணேஷ், மாவட்ட அவை பொருளாளர் கருப்புசாமி, மாவட்ட தலைவர் ஆறுமுகம், வட்டார தலைவர்கள் முகமது ரபீக், டீன்ராஜா, மணிகண்டன், வெங்கட்ராமன், செயலாண்மை குழு பொருளாளர் செங்குட்டுவன், துணைத்தலைவர் முத்தமிழ்செல்வன், இணை செயலாளர்கள் சாப் ஜான், சரவணகுமார், இணை பொருளாளர்கள் பிரபாகரன், ஆனந்த் காந்தி, பாபநாசம் லயன்ஸ் சங்க தலைவர் கணேசன், செயலாளர் செந்தில், பொருளாளர் சரவணன், அய்யம்பேட்டை லயன்ஸ் கிளப் தலைவர் தமிழ்செல்வன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னாள் மண்டல தலைவர் ஸ்டாலின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இம்மாநாட்டில் தஞ்சாவூர், பேராவூரணி, மதுக்கூர், திருமானூர், அய்யம்பேட்டை, தாராசுரம், திருவெரும்பூர், பாபநாசம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த லயன்ஸ் சங்க பொறுப்பாளர்களும் மாவட்ட அமைச்சரவை பொறுப்பாளர்களும் மண்டல ஒருங்கிணைப்பாளர் களும் கலந்து கொண்டனர். மேலாண்மை குழு செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்