சுவாமிமலையில் மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் சுவாமி தரிசனம்

சுவாமிமலையில் மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் சுவாமி தரிசனம்
X

கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில், தரிசனம் செய்த, மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன்.

மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன், கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் தரிசனம் செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில், மணிப்பூர் கவர்னராக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணேசன் தன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன். சுவாமிமலை சாமிநாத சாமி எங்களது குலதெய்வம். எத்தனை முறை சுவாமிமலை கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்துள்ளேன்.எனக்காக உளமாற பிரார்த்தனை செய்ய ஒரு இடம் இருக்குமானால் அது சுவாமிமலை. எல்லா மனிதரைப் போல எனக்கும் விருப்பு வெறுப்புகள் உண்டு. எனவே நான் உளமார செய்த பிரார்த்தனைகளுக்கு முருகன் அருளால் நிறைவேறியிருக்கிறது.

அதற்கு நன்றிக்கடன் தெரிவிக்க கோவிலுக்கு வந்துள்ளேன். நூற்றுக்கணக்கான முறை தரிசித்து மகிழ்ந்த தஞ்சை பெரிய கோவில், அதனை மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமாக வருவேன்.

மணிப்பூர் இயற்கையிலேயே அழகான இடம். பாரத நாட்டின் சுவிட்சர்லாந்து என்று அதனை அழைக்கிறார்கள். பிரச்சினைகள் எதுவும் இல்லை. அம்மாநில மக்கள் கலையின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். அதனால் எனக்கு தஞ்சாவூரில் இருப்பது போலவே தோன்றுகிறது என்றார். பின்னர் பந்தநல்லூர் அருகே உள்ள மகாராஜாபுரத்தில் உள்ள கோயிலிலும், இல. கணேசன் சுவாமி தரிசனம் செய்தார்.

Tags

Next Story
ai marketing future