இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் 3 ஆயிரம் முக கவசம் வினியோகம்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் 3 ஆயிரம் முக கவசம் வினியோகம்
X
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை சார்பில் 3 ஆயிரம் முக கவசம் வழங்கப்பட்டது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிளை சார்பில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு என பாபநாசம் ரயில் நிலையத்தில் புங்கன், வேம்பு, பாதாம் உள்ளிட்ட 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை புரவலரும், ஆயுட்கால உறுப்பினரும், தி.மு.க. பிரமுகருமான நவநீதகிருஷ்ணன், தஞ்சை ஊரக உட்கோட்ட காவல் சரகங்களில் பணியாற்றக் கூடிய காவலர்களுக்கு 3 ஆயிரம் முகக் கவசங்களை பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணியிடம் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!