பாபநாசம் அருகே அகரமாங்குடி ஊராட்சியில் அடையாள அட்டை வழங்கும் முகாம்

பாபநாசம் அருகே அகரமாங்குடி ஊராட்சியில் அடையாள அட்டை வழங்கும் முகாம்
X

பாபநாசம் அருகே நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

பாபநாசம் அருகே அகரமாங்குடி ஊராட்சியில் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, அகரமாங்குடி ஊராட்சியில் அமைப்புசாரா தொழிலாளர்களை நலவாரியத்தில் பதிவு செய்து அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை அகரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாஅன்பழகன் தொடங்கி வைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வில்லியம் மற்றும் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், கலந்து கொண்டனர். அகரமாங்குடி ஊராட்சியில் உள்ள கிராமங்களை சேர்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்கள் பயனடைந்தனர். ஏற்பாடுகளை அகரமாங்குடி ஊராட்சி செயலர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!