பாபநாசம் பகுதியில் காலை முதல் கொட்டித்தீர்த்த கனமழை

பாபநாசம் பகுதியில் காலை முதல் கொட்டித்தீர்த்த கனமழை
X

அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா, தாளடி நெல் பயிர்கள் தொடர் மழையின் காரணமாக வயல்களில் தேங்கியுள்ள மழைநீரில் சாய்ந்தது

பாபநாசம் பகுதியில் காலை முதல் கொட்டித்தீர்த்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், கோபுராஜபுரம், பெருமாங்குடி, திருப்பாலத்துறை,108 சிவாலயம், அரயபுரம், வங்காரம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பல மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மேலும் அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா, தாளடி நெல் பயிர்கள் தொடர் மழையின் காரணமாக வயல்களில் தேங்கியுள்ள மழைநீரில் சாய்ந்து உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!