மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு

மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல்பயிர்கள் நீரில் மூழ்கி  பாதிப்பு
பல பகுதிகளில் அறுவடை இயந்திரம் செல்ல முடியாத நிலையில் விளைநிலங்கள் உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆறு ஏக்கர் நிலம் மழை காரணமாக நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் 1.6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் 15,000 ஏக்கர் அளவிற்கு அறுவடை பணிகள் உள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் அறுவடை இயந்திரம் செல்ல முடியாத நிலையில் விளைநிலங்கள் உள்ளதால், விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாபேட்டை அருகே புத்தூர் பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த 6 ஏக்கர் நிலம் பத்து நாட்களுக்கு மேலாக நீரில் மூழ்கி, அறுவடை இயந்திரம் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளதால் பயிரை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும் வேளாண் துறையும் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story