பாபநாசம் பகுதியில் அரசு சார்பில் கால்நடை மருத்துவ முகாம்

பாபநாசம் பகுதியில்  அரசு சார்பில் கால்நடை மருத்துவ முகாம்
X

பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை முகாம் 

இம்முகாமில் செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன

பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் கணேசன், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் வரவேற்றார். பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் வடிவேலன், சரவணன், ஆய்வாளர்கள் கலியபெருமாள், தமிழ்வாணன், ரூபா ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து தீவனப்பயிர் மற்றும் தீவனப் புல் சாகுபடி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சிறு கண்காட்சியும் நடைபெற்றது. பின்னர் கால்நடை வளர்ப்பவர்களுக்கு தாது உப்புக்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த கால்நடைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு சிறந்த மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இந்திரா காந்தி நடராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் துரை, கலைவாணி, விஜயலட்சுமி, மணியம்மை ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் முருகையன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!