பாபநாசத்தில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கியதில் மோசடி : விசாரிக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாபநாசத்தில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கியதில் மோசடி : விசாரிக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பிரதமர் பயிர் காப்பீட்டுத்திட்டத்தில்  இழப்பீடு வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பாபநாசத்தில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதால் அந்த முறைகேடுகளை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாபநாசத்தில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கியதில் மோசடி முறைகேடுகளை சிபிஐ கொண்டு விசாரிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாபநாசம் தலைமை தபால் நிலையம் முன்பு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நெற் கதிர்களுடன், பிரதமர் உருவப்படத்துடன், விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் 2016-2020 ஆண்டு இழப்பீடு வழங்கியதில் உள்ள மோசடி முறைகேடுகளை சிபிஐ கொண்டு விசாரிக்க வேண்டும், நடப்பு ரபி பருவ இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறைகளில், முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுவாமிநாதன் கண்டன முழக்கம் எழுப்பினர். நிர்வாகி வாசுதேவன் முருகேசன் முன்னிலை வகித்தனர். திருஞானம் வவிளக்கிப் பேசினார். ராஜ்மோகன் நன்றி கூறினார்.

Tags

Next Story