பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) சார்பில் கொடியேற்று விழா

பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) சார்பில் கொடியேற்று விழா
X

கட்சிக்கொடி(பைல் படம்)

பாபநாசம் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

பாபநாசம் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கண்ணையன் கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்லதுரை, மாவட்ட குழு உறுப்பினர் மாசிலாமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் உமாபதி, கணேசன், அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் செங்கதிர், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயாள், செயற்குழு உறுப்பினர் ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயாள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags

Next Story