பாபநாசம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம்

பாபநாசம் வட்டாரத்தில்  விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம்
X

பாபநாசம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

பாபநாசம் வட்டாரத்தில் நீர்வள வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வள வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கோவிந்தநாட்டுசேரி கிராமத்தை சேர்ந்த 25 முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதில் பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன், துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தசாமி , கபிஸ்தலம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் பரணிகா, மற்றும் வேளாண்மைக் கல்லூரியை சேர்ந்த 7 வேளாண்மை இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

விவசாயிகளுக்கு நெல் விதைப்பிலிருந்து அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்கள் பற்றி பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் பயிற்சியளித்தார். இந்த பண்ணைப்பள்ளியில் வேளாண்மைக் கல்லூரியை சேர்ந்த வேளாண்மை இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் நெல் விதைக்கும் பொழுது வீரியமான விதைகளை கோழி முட்டை கொண்டு தேர்வு செய்யும் முறை (மிதக்கும் முட்டை) பற்றிய செயல்விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர்.

Tags

Next Story
ai marketing future