பாபநாசம் அருகே அறுவடை இயந்திரம் மோதி விவசாயி பலி

பாபநாசம் அருகே அறுவடை இயந்திரம் மோதி விவசாயி பலி
X
அறுவடை செய்ய உதவி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கதிர் அறுக்கும் அறுவடைஇயந்திரம் மோதியதில் வீரமணி பலியானார்

மெலட்டூர் அருகே உள்ள ஏர்வாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி ( 55) விவசாயி. இவரது வயலில் கதிர் அறுக்கும் அறுவடை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. அதே வயலில் வீரமணி வயல் வரப்பு ஓரம் சாய்ந்திருந்த கதிர்களை நீண்ட கம்பு மூலம் ஒதுக்கி கொடுத்து அறுவடை செய்ய உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கதிர் அறுக்கும் அறுவடை எந்திரம் வீரமணி மீது மோதியது.

இதில் நிலைகுலைந்து கீழே சாய்ந்த வீரமணி மீது அறுவடை எந்திரம் சக்கரம் ஏறியது. பலத்த காயமடைந்த அவரை மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வீரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மெலட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு