பாபநாசம் அருகே மரத்திலிருந்து விழுந்து விவசாயி சாவு

பாபநாசம் அருகே மரத்திலிருந்து விழுந்து விவசாயி  சாவு
X

மாமரத்தில் இருந்து தவறி விழுந்த காமராஜ்

பாபநாசம் அருகே மாமர கிளையை வெட்ட ஏறிய விவசாயி தவறி விழுந்து சாவு

பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கீழத் தெருவில் வசித்து வந்தவர் காமராஜ் (65 ) விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் ஏறி அரிவாளால் கிளையை வெட்டியுள்ளார்.

அப்போது திடீரென்று விவசாயி காமராஜ் நிலைதடுமாறி கீழே தவறி விழுந்துவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்துஅவரது மகன் ஹரிஹரசுதன் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!