கபிஸ்தலம் ஊராட்சியில் தொற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

கபிஸ்தலம் ஊராட்சியில்  தொற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம்
X

கபிஸ்தலம் அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

கபிஸ்தலம் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் தொற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் ஊராட்சி நர்சரி பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தொற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மகாலட்சுமி பாலசுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், சரவண பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.

முகாமில் சிறப்பு விருந்தினராக கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நவீன் குமார், சுகாதார செவிலியர் சங்கவை மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நோய் கண்டறிந்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

நோயின் தன்மை கண்டறிந்து ஒரு சில பயனாளிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் வர அறிவுறுத்தினர். இந்த முகாமில் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் , பணித்தள பொறுப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!