பாபநாசத்தில் சுற்றுச்சூழல், பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
விவேகானந்தா சமூக தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம், பாபநாசத்தில் நடைபெற்றது.
பாபநாசம் விவேகானந்தா சமூக தொண்டு நிறுவனத்தின் சார்பில், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம், நிறுவன வளாகத்தில், சங்கத் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது. சங்கச் செயலர் கண்ணதாசன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக நீர் நிலைகள், ஆறுகள், விவசாய நிலங்கள், மற்றும் விலங்குகள், பறவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது விவசாய நிலங்களில் ரசாயன உரங்கள், வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளால் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் நஞ்சாகி வருகிறது. அதனால் நாமும் நமது சந்ததிகளும் நஞ்சில்லா உணவை தேடி செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. எனவே, நமக்கு நாமே நம் வீட்டுக்கு தேவையான இயற்கை உணவு உற்பத்தி, சிறுதானிய உற்பத்தி, நாட்டுக் காய்கறி உற்பத்திக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இயற்கை விவசாயி வடக்குமாங்குடி சிவகுருநாதன், சங்க நிர்வாகிகள் உஷாராணி, புவனேஸ்வரி, சிவகுமார் சமூக ஆர்வலர் தம்பிராஜா (எ) முகமதுநஜிர் ஆகியோர் கலந்து கொண்டனர். களப்பணியாளர் மணி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu