திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டி

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டி
X

தேவாரம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளூக்கு பரிசு வழங்கப்பட்டது. 

பாபநாசம் அருகே, திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில், தேவாரம் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

கும்பகோணம் அருகெ, பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில், ஆன்மீக பேரவை சார்பில், தேவாரம் ஒப்புவிக்கும் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பாபநாசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், தக்கார் லெட்சுமி, ஆன்மீக பேரவை அமைப்பாளர்கள் சீனிவாசன், தனபால், இசை ஆசிரியை தேவி லெட்சுமி, ஆசிரியை ரேவதி, ஆசிரியர்கள் சிங்காரவேல், அரவிந்த், கோவில் எழுத்தர் சங்கரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.

Tags

Next Story