திருப்பாலத்துறை பாலைவனநாதர் சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா

திருப்பாலத்துறை பாலைவனநாதர் சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா
X

திருப்பாலத்துறை பாலைவன நாதர் சுவாமி திருக்கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

திருப்பாலத்துறை பாலைவன நாதர் சுவாமி திருக்கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

பாபநாசம் அருகே திருப்பாலத்துறை அருள்தரும் தவள வெண்ணகை அம்பாள் உடனாய அருள்மிகு பாலைவன நாதர் சுவாமி திருக்கோயிலில் ஆலயத் திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதனையொட்டி இன்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது.

இதனையொட்டி 8 ந்தேதி மாலை 4 மணி அளவில் விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து சாந்தி, கலச பூஜைகள், பூர்ணாஹூதி தீபாராதனையும் 9ந் தேதி இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம் புதிய கொடி மரம் பிரதிஷ்டையும் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஹரிஷ் குமார், தக்கார் புண்ணியமூர்த்தி, கிராமவாசிகள், ஆன்மீக பேரவை மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!